திருப்பூர், அக். 10 –

ஓய்வூதியர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கவும், எட்டாவது ஊதியக்குழுவில் புதிய விகிதத்தில் 21 மாத கால நிலுவைத் தொகையை வழங்கவும் வலியுறுத்தி திருப்பூரில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பாக புதன்கிழமை காலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஓய்வூதியர் கூட்டமைப்பின் தலைவர் டி.துரைசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் க.சண்முகம் வரவேற்றார். கோரிக்கைகளை விளக்கி அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் மு.பாலச்சந்திரமூர்த்தி பேசினார். மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் வட்டச் செயலாளர் பி.இ.அர்ச்சுனன், ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கங்களின் மாவட்டச் செயலாளர் சி. ஜெயப்பிரகாசம் ஆகியோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து வைத்து அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் அ.நிசார் அகமது சிறப்புரை ஆற்றினார். அரசு நிறுவனங்களின் ஓய்வு பெற்றோருக்கு அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்தவும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்கவும், போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளன்றே பணப்பயன் வழங்கவும் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஓய்வூதியர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: