அக்டோபர் 11 உலக பெண் குழந்தைகள் தினமாகும். உலகம் முழுவதும் பெண் குழந்தைகள், மிகப்பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையிலும் கூட இரண்டாம்பட்சமாகவே பார்க்கப்படுகிறார்கள். சத்துணவு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் பெண்குழந்தைகளுக்கு முதன்மையாக கிடைப்பது இல்லை என்ற நிலை நீடிக்கிறது. பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இதற்கு எதிராக, பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்ற உணர்வுடன் உலகம் முழுவதும் இயக்கங்களும், முனைப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக உலகப் பெண் குழந்தைகள் தினம், வியாழனன்று கொண்டாடப்பட்டது. கோவில்பட்டியில் பங்களாதெருவில் உள்ள நகராட்சி ஆரம்பப்பள்ளியில் ரோட்டரி சங்கம் மற்றும் வட்டார குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில் பெண் குழந்தைகளுக்கு நெற்றித் திலகமிட்டு கிரீடம் அணிவித்து ஊர்வலம் நடத்தி கொண்டாடிய நிகழ்ச்சி அனைவரையும் ஈர்த்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.