சென்னை: புதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு புகார் குறித்த விசாரணை ஆணைய ஆவணங்களை தமிழக அரசு பரிசீலிக்காமல் நேரடியாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றியதாக மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வந்த நீதிபதி ரகுபதி ஆணைய ஆவணங்களை தமிழக அரசு முறைப்படி ஆய்வு செய்து, தேவைப்பட்டால் உரிய விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆவணங்களை பரிசீலிக்காமல் அரசியல் உள்நோக்கத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாகவும் எனவே அரசாணையை ரத்து செய்யவும், லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவும் மு.க.ஸ்டாலினின் மனுவில் கோரப்பட்டிருந்தது.

விசாரணையின் போது ஆவணங்கள் முறைப்படி பரிசீலிக்கப்பட்டே லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படை க்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆணையத்திடம் ஆவணங்கள் பெறப்பட்ட, பரிசீலிக்கப்பட்ட மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் ஒப்படைக்கப்பட்ட நாட்கள் உள்ளிட்ட விவரங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட் டார். விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

Leave A Reply

%d bloggers like this: