என்னாங்கடா உரிமை – இங்க

யாருக்கு இருக்கு உரிமை….?
எழுத பேச நடக்கக்கூட
எவனுக்கிருக்கு உரிமை..?
என்னாங்கடா உரிமை – இங்க
யாருக்கு இருக்கு உரிமை….?
ஆட பாட கூட்டம்கூட
ஆருக்கிருக்கு உரிமை..?

ஆக்சிஜன் இல்லாமலே
குழந்தை சாக உரிமை!
ஆட்டுக்கறி வச்சிருந்தாலும்
அடிச்சிக்கொல்ல உரிமை!
மாட்டுக்கறி தின்னுறவன்
மண்ணா போக உரிமை-கோர்ட்டை
மயிருன்னு சொல்லக்கூட
ராஜாவுக்கு உரிமை..!

என்னாங்கடா உரிமை – இங்க
யாருக்கு இருக்கு உரிமை….?
எழுத பேச நடக்கக்கூட
எவனுக்கிருக்கு உரிமை..?

அரசு பணத்த நக்கித்தின்ன
அம்பானிக்கே உரிமை
ஆயிரங்கோடி வரிய ஏய்க்க
அதானிக்கே உரிமை
கோட்டுசூட்டு போட்டுக்கிட்டு
ஒலகம் சுத்த உரிமை – ஒங்க
கோவணத்த உருவக்கூட
மோடிக்குத்தான் உரிமை!

என்னாங்கடா உரிமை – இங்க
யாருக்கு இருக்கு உரிமை….?
எழுத பேச நடக்கக்கூட
எவனுக்கிருக்கு உரிமை..?

அம்மணக்குண்டியா ஆட்டம் போட
சாமியாருக்குலாம் உரிமை
ஆயுதம் தூக்கி நடக்குறதுக்கு
ஆர் எஸ் எஸ் க்கு உரிமை
எதுத்து பேசுனா மூஞ்சியில
கரியை பூச உரிமை
அதையும்மீறி நிமிர்ந்து நின்னா
சுட்டுத்தள்ளவும் உரிமை!

என்னாங்கடா உரிமை – இங்க
யாருக்கு இருக்கு உரிமை….?
எழுத பேச நடக்கக்கூட
எவனுக்கிருக்கு உரிமை..?

எட்டுவழி சாலை போட்டு
கொள்ளையடிக்க உரிமை
கார்ப்பரேட்டு கூட்டமெல்லாம்
காட்டை அழிக்க உரிமை
எடுத்த உடனே சுடுறதுக்கு
போலீசுக்கும் உரிமை – அதை
எதிர்த்து ஒரு கோஷம்போட
சோபியாவுக்கில்ல உரிமை!

என்னாங்கடா உரிமை – இங்க
யாருக்கு இருக்கு உரிமை….?
எழுத பேச நடக்கக்கூட
எவனுக்கிருக்கு உரிமை..?

கருத்து சொல்லுற சுதந்திரத்த
கொத்துக்கறி போட்டுட்டான்
அரசியல் சாசன உரிமையை
அம்மணமா ஆக்கிட்டான்
ஆடுமாடு நாயிகூட
வாய்திறந்து பேசுதுடா – நாங்க
அதைவிடவும் கேவலமா -உரிமை
மசுரு என்ன வாழுதுடா!

என்னாங்கடா உரிமை – இங்க
யாருக்கு இருக்கு உரிமை….?
எழுத பேச நடக்கக்கூட
எவனுக்கிருக்கு உரிமை..?

– ஆக்கியோன் அடியேன்

கருப்பு கருணா
 · 

Leave a Reply

You must be logged in to post a comment.