சென்னை:
ஒரகடத்தில் உள்ள யமஹா மோட்டார் ஆலையின் தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் தொழிலாளர் கோரிக்கைகள் குறித்து தாம்பரம் வருவாய் கோட்ட அலுவலத்தில் புதனன்று (அக்.10) காலை 10மணியளவில் மாவட்ட ஆட்சியர் நாராயணன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், உதவி கண்காணிப்பாளர், தொழிலாளர் இணை ஆணையர் இரண்டு, வருவாய் கோட்ட அலுவலர், யமஹா நிறுவன பிரதிநிதிகள்,சிஐடியு தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக யமஹா தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தொழிற்சங்கம் அமைத்தற்காகச் சங்க நிர்வாகிகளை நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியுள்ளது.இதுகுறித்து பேச்சு நடத்தத் தொழிலாளர் நலத்துறை பல முறை அழைத்தும் நிர்வாகம் வரவில்லை. இதையடுத்து தொழிலாளர் போராட்டம் தொடர்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.