தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம், பேரா வூரணி அருகே மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் கடலில் தூர்வாரி ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

மல்லிப்பட்டினத்தில் பல ஆண்டுகளாக சிறிய அளவிலான மீன்பிடித் துறைமுகம் உள்ளது. இந்த மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்து, நவீ னப்படுத்த வேண்டும் என இப்பகுதி மீனவர்கள், மீனவர் சங்கத்தினர் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். சட்டமன்ற தேர்தலின் போது ‘தாங்கள் வெற்றி பெற்றால், துறைமுகத்தை விரிவாக்கம் செய்து  தருவோம்’ என வேட்பாளர்கள் உறுதி அளிக்கும் நிலை உரு வானது.

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதும், அதிமுகவைச் சேர்ந்த எம்எல்ஏ மா.கோவிந்தராசு, அப் போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் இதுகுறித்து கோரிக்கை விடுத்தார். முதலமைச்ச ரும் ரூ.110 கோடி மதிப்பீட்டில் மல்லிப்பட்டினம் துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படும் என சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இத்திட்ட மதிப்பீடு ரூ.66 கோடியாக குறை க்கப்பட்டது.

இதையடுத்து பணிகள் தொடங்கப்பட்டு, துறைமுக விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வந்தது. மல்லிப்பட்டினத்தில் இரு மீன்பிடித்துறைமுகம் மற்றும் படகு இறங்குதளம், மீனவர்கள் வலை காயவைக்கும் இடம், ஓய்வறை, சுற்றுச்சுவர் ஆகியவை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் படகுகளை நிறுத்தி வைக்கும் இடம் மண் மேடிட்டு, தூர்ந்து போய் ஆழம் குறை
வாக உள்ளது. எனவே விசைப் படகுகளை நிறுத்தி வைக்க ஏதுவாக, மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் கடலை ஆழப்படுத்தும் பணி தற்போது மும்முரமாக நடை பெற்று வருகிறது.
இதற்காக வரவழைக்கப்பட்ட நவீன இயந்திரங்கள் பொருத்தப் பட்ட சிறிய இரக கப்பல் மூலம்,
கடலில் உள்ள மண் தோண்டி யெடுக்கப்பட்டு, குழாய் மூலம் உறிஞ்சப்பட்டு, கரையோரம் கொட்டப் படுகிறது.

இவ்வாறு கொட்டப்படும் மண், கரையோரம் மலைபோல குவிந்து கிடக்கிறது. தொடர்ந்து கடலுக்குள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு இப்பகுதி மீனவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளதோடு, துறைமுகப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: