ஸ்டாக்ஹோம் :

கடந்த 1968 ஆம் ஆண்டிலிருந்து பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் பொருளாதாரத்தில் பெரும் கண்டுபிடிப்புகளை அளிப்போருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொருளாதாரத்திற்கான பரிசை ஸ்வீடன் நாட்டின் மத்திய வங்கியான ஸ்வெரிஜெஸ் ரிக்ஸ் வங்கி அறிமுகப்படுத்தி வழங்கி வருகிறது.

இந்தாண்டுக்கான நோபல் பரிசுகள் மற்ற அனைத்து துறைகளுக்கும் வழங்கப்பட்ட நிலையில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு தற்போது வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினை வில்லியம் டி நார்தாஸ் மற்றும் பவுல் எம் ரோமர் ஆகிய இருவருக்கும் நீண்டகாலம் நடக்கும் பெரிய அளவிலான பொருளாதார ஆய்வில் காலநிலை மாற்றத்தை ஒருங்கிணைத்ததற்கும் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஒருங்கிணைத்ததற்கும் வழங்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: