அண்டை நாடுகளுடன் உறவு குறித்த உங்கள் பார்வை என்ன?
எல்லைப் பிரச்சனை தானே!
நமக்கும் சீனாவிற்கும் எல்லைத் தகராறு தவிர வேறு தகராறு கிடையாது அது போல் நமக்கும் பாகிஸ்தானுக்கும் காஷ்மீர் யாருக்கு என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை. இவைகள் பேசித்தீர்க்க வேண்டிய பிரச்சனைகளே, யுத்தம் மூலம் தீர்வு தேடுகிற பிர்ச்சனையே அல்ல. மூன்று நாடுகளுக்குமிடையே வர்த்தக உறவும் உள்ளது.எனவே பேசமாட்டோம் ஆயுதங்களோடு பேசலாம் என மோடி அரசு ஆயுதங்களை குவிக்கிறது
மோடி அரசு எந்த நியாயமான காரணங்களுமின்றி இந்தியாவிலேயே தேவையிருந்தால் உற்பத்தி செய்ய முடியும் என்பதைத் தாண்டி ஏவுகணைகளை, பறந்து வீசும் ஃபைட்டர் ஜெட்டுகளை பிரான்சிடமிருந்து வாங்குகிறது. ஜப்பான் அமெரிக்காவோடு நிரந்தர ராணுவ கூட்டுவைத்து அதற்குத் தேவையான ஆயுதங்களையும் இந்தியா வாங்கி குவித்துவருகிறது. தற்போது இவை போதாது என்று இந்தியாவை சுற்றி இருக்கும் அண்டைநாடுகளின் பகைவர்கள் யாராவது ஏவுகணைகளை வீசினால் அதனை வழிமறிக்கும் கேடயத்தை அதாவது ஏவுகணைத் தடுப்புக் கேடயமான எஸ்–400ஐ ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறது.
. தனது ராணுவ கூட்டிலிருக்கும் இந்தியா ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்குவதா என்று அமெரிக்காவும் கோபப் படவில்லை, சீனாவும் கண்டு கொள்ளவில்லை ஏனெனில் இந்த எஸ்-400 தாக்குதல் ஆயுதமல்ல ஏவுகணைகளை தடுக்கும் கேடயம்.
இன்றைய உலகமய சூழலில் இத்தகைய ஆயுதகுவிப்பு விவேகமானதா? என்ற கேள்வி எழுகிறது..
இரண்டு உலக யுத்தங்கள் மற்றும் சோவியத் வீழ்ச்சியும் ஆயுதக் குவிப்பும் யுத்தங்களும் என்ன பின்விளவுகளை உருவாக்கும் என்பதை போதிக்கும் வரலாறாகும். முதல் உலகப் போரில் வெற்றிக் கொடி நாட்டிய பிரிட்டன் அதன் பிறகு வல்லரசு அந்தஸ்தை இழந்தது. இரண்டாவது உலகப் போரில் ஹிட்லர் ஏவுகணை ஆயுதங்களைக் குவித்து போரில் குதித்தான் போரில் தோற்றான் ஜெர்மனியின் பொருளாதாரம் சீரழிந்தது அமெரிக்கக் கடனை சார்ந்து நிற்க தள்ளப்பட்டது. 72 வருடங்கள் கடந்த பிறகும் இன்னும் அமெரிக்க ஜனாதிபதி கிழித்த கோட்டை அந்த நாட்டால் தாண்டமுடியவில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஆயுதப் போட்டியில் இறங்கிய சோவியத் பொருளாதாரம் 45 வருடங்களில் கலகலத்து, அதன் சோசலிச பாதை அடைபட்டு போனது.
இன்று ஏகாதிபத்தியவாதிகள் தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்த ஆயுதங்களை நாடுவதில்லை ஆயுதங்களை விற்பனை செய்யும் வியாபாரிகளாகிவிட்டனர்.
மூன்றாம் உலக நாடுகளிடையே உருவாகும் எல்லை, நதிநீர் தாவாக்களினால் உருவாகும் பகைமையை வளர்த்து அவர்களை ஆயுதம் குவிக்க வைத்து பொருளாதார தற்சார்பை சீர்குலைப்பதில் கவனம் செலுத்துகிறது
தற்போது அமெரிக்க ராணுவ மையம் பேரழிவு ஆயுத ஆய்விற்கு அதிக நிதி ஒதுக்குவதில்லை. அதற்கு பதிலாக ஒரு நாட்டின் கட்டமைப்பை ,குலைக்க டாலரை ஆயதமாக்கும் ஆய்விற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
இன்றைய உலக வர்த்தகம் மார்க்ஸ் காலத்து சுதந்திர வர்த்தகமல்ல ஏகாதிபத்திய வாதிகளின் கரன்சிகளை ஆயதமாக்கி வர்த்தக போர் நடத்துவதாகும் இன்று அமெரிக்கா சீனாவிற்கு எதிராக நடத்தும் வர்த்தகப் போரால் ரூபாயின் மதிப்பு கீழே விழுகிறது விலைகளை உயர்த்துகிறது. வீட்டுக் கடனக்கு வட்டியை உயர்த்த வங்கிகளை தள்ளுகிறது.
இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகியோர்களிடையே நிலவும் தகராறுகளை உசுப்பேத்தி ஆயுதங்களை குவிக்க வைக்க பென்டகனும் சி.ஐ.ஏ யும் எல்லா வழிகளிலும் முயற்சிக்கிறது. இதன் மூலம் இந்திய- பாகிஸ்தான் பொருளாதார கட்டமைப்புக்களை டாலரை சார்ந்து இருக்க தள்ளுகிறது. அதே வேளையில் இந்திய ஆயுத குவிப்பை எதிர் கொள்ள சீனாவும் ஆயுதங்களை குவிக்கத் தள்ளி சோவியத்தை போல் சீன சோசலிச பாதைக்கு அவர்களே வேட்டுவைத்துக் கொள்ள அமெரிக்கா வர்த்தக போரை நடத்துகிறது.. .
. மோடிஅரசின் விலை கொடுத்து ஆயுதங்களை குவிப்பது இந்தியா- சீன பாகிஸ்தான் நாடுகளின் பொருளாதாரத்தையும் சீர்குலைக்கும் .டாலரின் ஆதிக்கம் நீடிக்கவே உதவும். இது தற்கொலைக்கான பாதையே!

Leave a Reply

You must be logged in to post a comment.