ரியாத்:
சவூதியில் இயங்கும் சர்வதேச இந்திய பள்ளியை மூட வேண்டாம் என இந்திய மாணவர்கள் சுஷ்மா சுவராஜுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சவூதியில் ஜெட்டா நகரில் ஐ.ஐ.எஸ்.ஜெ. என்றழைக்கப்படும் இண்டர்நேஷனல் இந்தியன் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத் திட்டம் பயிற்றுவிக்கப்படுகிறது. இதில் ஏராளமான இந்திய மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

தற்போது இந்த பள்ளியின் மாணவர்கள் பிரிவு இயங்கி வரும் கட்டிடம் குறித்த பிரச்சனையில் சவூதி நீதிமன்றம் அக்.9 ஆம் (செவ்வாய்க்கிழமை) தேதிக்குள் மாணவர்கள் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் கல்வி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பள்ளியில் படிக்கும் சுமார் 3,300 மாணவர்கள் ‘தயவு செய்து தங்களுக்கு உதவுங்கள்’ என கோரிக்கை விடுத்து மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு, சமூக வலைதளத்தில் மனு அனுப்பியுள்ளனர். மேலும் 1,800-க்கும் மேற்பட்டோர் டுவிட்டரில் நேரிடையாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.