பலு:
இந்தோனேசிய நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை 2,000-ஐ நெருங்கி யுள்ளது. இந்தோனேசியாவில் கடந்த செப்.29 ஆம் தேதி சுலாவேசி தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை, சுனாமி தாக்கியது.

இதன் காரணமாக கடலோரத்தில் இருந்த பெரிய அளவிலான குடியிருப்புகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் தரை மட்டமாகின. இந்நிலையில் கடந்த ஒருவாரமாக மீட்புப் பணிகள் நடந்து வரும்நிலையில்,சுனாமி மற்றும் நிலநடுக்கப்பாதிப்புகளுக்கு பலியானோர் எண்ணி க்கை 2,000-ஐ நெருங்கியுள்ளது. இதனிடையே பலு நகரில் தற்போது ஓரளவு இயல்பு நிலை  திரும்பியுள்ளதால் மாண வர்கள் கல்விக்கூடங்களுக்குத் திரும்பினர்.

Leave A Reply

%d bloggers like this: