கடலூர் மாவட்டத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நிரந்தர வெள்ளத்தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் மாவட்ட நிர்வாகத்திற்கு ஏற்பட்டது. பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னர் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.140 கோடி நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில், கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆறு, ஏரிகளின் கரைகளை பலப் படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக கெடிலம் ஆற்றில் திருவந்திபுரம் தடுப்பணை யிலிருந்து தேவனாம்பட்டினம் கடல் முகத்துவாரம் வரையில் கரையை பலப்படுத்த ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி, ஏற்கனவே உள்ள கரைகளில் மேலும் மண் கொட்டி கரையைப் பலப்படுத்தி தேவையான இடங்களில் நீர்போக்கிகள் அமைக்கப்பட்டன. மேலும், ஆற்றின் உட்பகுதிக்குள் கரையின் சாய்வுப்பகுதியில் ஒரு அடி சதுரமுள்ள சிமெண்ட் கற்களும் பதிக்கப்பட்டு வருகின்றன. கூடுதலாக, கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைகள் அமைக் கும் பணியும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கடலூரில் கடந்த சில நாட்களாக பெய்த மழைக்கு கெடிலம் ஆற்றின் கரைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கரைகளின் அனைத் துப்பகுதிகளிலும் இந்த அரிப்பானது சிறியது முதலாக பெரிய அளவில் கரையை சேதத்திற்கு உள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளது.

அத்துடன், கம்மியம்பேட்டையில் அமைந்துள்ள தடுப்பணை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கற்கள் பெயர்ந்து விழுந்துள்ளன. இந்த கற்களை மீண்டும் ஒட்டும் பணியில் ஒப்பந்ததாரர் ஈடுபட்டார். அதே நேரத்தில் கற்கள் பதிக்கப்பட்ட பகுதிகளில் மிகப்பெரிய அளவில் விரிசல் விட்டுள்ளது. இந்த விரிசலானது அடுத்தடுத்து மழை பெய்தால் கற்கள் சரிந்து கரை முழுவதுமாக இடிந்து விழும் நிலை ஏற்படும். ஒப்பந்த பணி முழுவதுமாக முடிய இன்னும் சில மாதங்கள் ஆகும். பணி முழுமை பெற்ற சில இடங்களிலேயே இதுபோன்று சேதம் ஏற்படுவது ரூ.140 கோடியும் கரையில் கறைந்துவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்களின் பணியை அதிகாரிகள் முறையாக கண்காணித்து தரத்துடன் செயல்படுத்த வைப்பதற்கு பதிலாக ஊழலுக்கு துணைபோய்விட்டார்களே என அச்சப்பட வேண்டி உள்ளது.

இதுகுறித்து கரையோரம் வசிக்கும் மக்கள் கூறுகையில், ‘கெடிலம் கரையை பலப்படுத் தும் பணி நடைபெறும் போதே அதில் சரளைக் கற்களுக்குப் பதிலாக ஏரிகளில் தூர்வாரப் பட்ட மண் கொட்டப் பட்டு வந்தது. இதனால், கரையை பலப்படுத்தும் பணி முழுமையடையாது என்று அப்போது கூறப்பட்டு வந்தது. அதற்கேற்றார் போல் தற்போது கரையில் அரிப்பு, விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சனையில் தலையிட்டு கரையை முறையாக பலப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும்” என்றனர்.

Leave A Reply

%d bloggers like this: