தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பருவ மழை பரவலாக பெய்து வரு கிறது. இதனால் கொள்முதல் நிலையங்களின் முன்பாக குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் மழையில் நனைந்து முளை விடத் தொடங்கி உள்ளது. இதனால் தஞ்சை மாவட்ட விவ சாயிகள் நெல்மூட்டைகளை பாதுகாக்க முடியாமலும், விளை வித்த நெல்லை விற்பனை செய்ய முடியாமலும் திண்டாடி வரு கின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி பாசனத்தின் மூலமும், ஆழ்துளைக்கிணறு பாசனத்தின் மூலமும் நடப்பாண்டில் குறுவை சாகுபடியாக கிட்டத்தட்ட 33 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது சில நாட்களாக அறுவடைப்பணி நடைபெற்று வரு கிறது. மாவட்ட நிர்வாகம் போதிய அளவில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவில்லை என்றும், சாக்குப்பை தட்டுப்பாடு இருப்பதாகவும் விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் பல இடங்களில் விவசாயி கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  நெல் கொள்முதல்நிலை யங்கள் போதிய அளவு திறக்கப்படாததாலும், சணல் சாக்குப்பை தட்டுப்பாடு காரணமாகவும், திறந்தவெளியில் நெல் கொள் முதல் நிலையங்கள் முன்பாக வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் நனைந்து, கடும் சிரமத்திற் கிடையே கடன் வாங்கி விளை வித்த பொருள் வீணாகி வருவதுவிவசாயிகளிடம் கடும் வேத னையை ஏற்படுத்தி உள்ளது.

10 நாள் ஆகியும் திறக்கப்படவில்லை: இந்நிலையில் ஒரத்தநாடு அருகே உள்ள கக்கரை பகுதியில், உள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் முன்பாக குவித்து வைக்கப் ப்பட்டுள்ள நெல்மூட் டைகளை பார்வையிட்டு, விவசாயிகளை சந்தித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் என்.வி. கண்ணன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.சுரேஷ் குமார், விவசாய சங்க மாவட்ட துணைத்தலைவர் எஸ்.கோவிந்தராஜூ, பால் உற்பத்தியாளர்கள் சங்க வி. துரைராஜ் ஆகியோர் குறைகளை கேட்டறிந்தனர்.

பின்னர் என்.வி.கண்ணன் கூறுகையில், “தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டலமேலாளரை கடந்த செப். 27 அன்று நேரடியாக சந்தித்து, நெல் கொள்முதல் நிலையங்களை கூடுதலாக திறக்குமாறு கோரிக்கை மனு அளித்தோம். அதனைப் பெற்றுக்கொண்ட மண்டல மேலாளர் உடனடியாக கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதாக உறுதி யளித்தார். ஆனாலும் 10 தினங் களைக் கடந்த நிலையிலும் திறக்கப்படவில்லை. ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையங்கள் முன்பும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருகின்றது. அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

20 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். போதிய அளவில் சாக்குப்பையை இருப்பு வைக்க வேண்டும். கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.