ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிஸோரம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பருடன் முடிவடைகிறது. எனவே அந்த மாநிலங்களுக்கு புதிதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தெலுங்கானா மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் வரை உள்ள நிலையில் முன்கூட்டியே சட்டப்பேரவையை கலைக்க முதல்வர் சந்திரசேகர் ராவ் முடிவு செய்தார். இதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி சட்டப்பேரவை கலைக்கப்பட்டுள்ளது. எவே அந்த மாநிலத்துக்கும் தேர்தல் நடத்த வேண்டும். எனவே 4 மாநில தேர்தலுடன் தெலங்கானாவுக்கும் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே தெலுங்கானாவில் பாஜக, காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிர சமதி உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன.

இந்நிலையில் ஏற்கனவே தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் உட்பட நாடுமுழுவதும் காலியாக உள்ள பல்வேறு சட்டப்பேரவை மற்றும் மக்களவை தொகுதிக்கும் தேர்தல் தேதியும் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன் படி இன்று தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் கூறியதாவது,
தமிழக இடைத்தேர்தல்:

தமிழகத்தில் தற்போது, நிலவி வரும் மழை காரணமாக தேர்தல் தேதி குறித்து தற்போது அறிவிக்க வேண்டாம் என தமிழக தலைமை செயலாளர் கடிதம் எழுதி உள்ளதார், தமிழக இடைத்தேர்தல் குறித்து  பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

சட்டப்பேரவை தேர்தல் தேதி விபரம்:

சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள்:

சத்தீஸ்கர்: முதல் கட்டத் தேர்தல் – நவம்பர் 12-ம் தேதி வாக்குப்பதிவு

2-ம் கட்டத் தேர்தல்- நவம்பர் 20-ம் தேதி

மத்திய பிரதேசம்: நவம்பர் 28-ம் தேதி

மிஸோரம்: நவம்பர் 28-ம் தேதி

ராஜஸ்தான்: டிசம்பர் 7-ம் தேதி

தெலுங்கானா: டிசம்பர் 7-ம் தேதி

வாக்கு எண்ணிக்கை: 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் டிசம்பர் 11-ம் தேதி நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: