திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா அலுவலத்தில் 8 வழிச் சாலை ஆட்சேபனை மனு மீதான விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணைக்கு வந்த விவசாயிகள் நாங்கள் நிலத்தை தரமாட் டோம் என்று மறுத்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை- சேலம் இடையே 8 வழிச் சாலை அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நிலங் களை கையகப்படுத்தி வந்தது. இதில் விவசாய நிலங்கள், பாரம்பரியமாக கட்டப்பட்ட வீடுகள், நீர்நிலை பரப்புகள், வனப் பகுதிகள் என பல்வேறு வகையான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.  இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் நிலம் கையகப்படுத்துவதற்கு, விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் வெற்றிவேல், மற்றும் வட்டாட்சியர், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆகியோர், விவசாயிகளிடம், நில எடுப்பு குறித்து விசாரணை நடத்தினர்.  சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 8 வழிச் சாலை எதிர்ப்பு கூட்டு இயக்கத்தின் நிர்வாகி கள் டி.கே.வெங்கடேசன், கே.வெங்கடேசன் உள்ளிட்ட பொறுப் பாளர்களுடன் விவசாயிகள் அரசு அலுவலர்கள் முன்பு ஆஜராகி, 8 வழிச் சாலைக்காக, தங்கள் நிலங்களை தரமாட் டோம் என்று உறுதிபட தெரிவித்தனர். மேலும், நிலம் எடுக்கும் பணிகளை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.