திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி, வேறு கல்லூரிக்கு செல்லாததால் அவர் கல்லூரியிலிருந்து நீக்கம் செய்யப்படுவதாக உத்தரவு வெளியாகியுள்ளது.

திருவண்ணாமலையை அடுத்த வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் படித்து வரும் சென்னை பெருங்குடியை சேர்ந்த மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, பாலியல் புகார் கூறிய மாணவி திருச்சி பகுதியில் உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருந்த பேராசிரியைகள் 2 பேர் வெவ்வேறு கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டனர். திருச்சி கல்லூரிக்கு தன்னை மாற்றிய கோவை வேளாண் பல்கலைக்கழக ஆணையை மாணவி ஏற்கவில்லை. பாதிக்கப்பட்ட தனக்கு நியாயம் கிடைக்க வேண் டும். அதுவரை திருவண்ணாமலை கல்லூரியில் தான் படிப்பேன் என்று அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், காலக்கெடு முடிந்ததால் கல்லூரியில் இருந்து கிரிஜாவை நீக்கம் செய்து கோவை வேளாண்பல்கலை பதிவாளர் (பொ) சுதாகர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான உத்தரவை கல்லூரி முதல்வருக்கு அனுப்பி வைத்துள்ளார். மாணவி கல்லூரிக்கு வரும்பொழுது, நீக்கம் செய்ததற்கான உத்தரவு வழங்கப்படும் என்று கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.