திருவண்ணாமலை,
தமிழகம் முழுவதும், அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை உள்ள அரசு
ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வியாழனன்று (அக்.4) சிறு விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு அலுவலர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் வெறிச்சோடி கிடந்தன. கொட்டும் மழையிலும்…தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கொட்டும் மழையிலும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் பொன். ரத்தினம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர் பி.எம்.கவுரன் ஆகியோர் தலைமை வகித்தனர். வேலூர், கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் வெறிச்சோடின.

Leave A Reply

%d bloggers like this: