கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஒரு குழந்தை உயரிழந்துள்ளது.மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நகர் பஜார் பகுதியில் நடைபாதையில் குண்டுவெடித்து உள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உயிரிழந்தது. மேலும் 4 பேர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குற்றவியல் புலனாய்வு துறை (சி.ஐ.டி.) குண்டுத் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த உள்ளது என போலீஸ் அதிகாரி கூறி உள்ளார்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மற்றும் தெற்கு டம் டம்  நகராட்சி தலைவர் பஞ்சு கோபால் ராய் தன்னை  இலக்கு வைத்து குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது  அவர்கள் என்னை இலக்கு வைக்க முயன்றதாக நினைக்கிறேன். இன்று அக்டோபர் 2 ம் தேதி, மகாத்மா காந்தியின் பிறந்த நாள். காந்திஜியின் கொலை தொடர்பாக எந்தவொரு குழு சம்பந்தப்பட்டிருந்தது என்பதை நாம்  அனைவரும் அறிவோம். அதேபோன்று  இந்த குண்டுவெடிப்பில் அவர்கள் ஈடுபட்டிருந்தால்  நான் ஆச்சரியப்பட மாட்டேன் என கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.