கடலூர்,
கடலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி மர்மமான முறையில் மரணம் அடைந்ததால் உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர். நீதிபதி விசாரணை மேற்கொண்டார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை நீடூரை சேர்ந்தவர் மன்சூர்அலி (52). இவர் மயிலாடுதுறையில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் தண்டனை பெற்று கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மற்றொரு கைதியான அன்சர் மீரானை சிறையை தகர்த்து கடத்தப் போவதாக வந்த தகவலை தொடர்ந்து திருச்சி சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் மற்றும் சிறை அலுவலர்கள் கைதிகளின் அறைகளை சோதனை செய்தனர். அதன்படி மன்சூர்அலி அறையை சோதனை செய்த போது, அவர் அங்கு மர்மமான முறையில் தூக்குப்போட்ட நிலையில் கிடந்தார். இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி கடலூர் முதுநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.