கடலூர்,
கடலூர் நகரத்தில் மார்க் சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி வீடுகள் தோரும் சென்று பெண்களிடம் பேசி சந்தா சேர்ப்பு இயக்கத்தை நடத்தினார்.

கடலூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒருபகுதியாக கடலூர் நகரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர்கள், ஆதரவாளர்கள், அரங்கங்களில் பணியாற்றுபவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று (முன்கூட்டி தகவல் தெரிவிக்காமல்) மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் உள்ளிட்டோர் குடும்பப் பெண்களிடம் தீக்கதிர் வாங்கிபடிப்பதன் அவசியம் குறித்து விளக்கினர். அவர்கள் முகமலர்ச்சியுடன் தீக்கதிர் சந்தாவிற்கான தொகையை வாசுகியிடம் வழங்கினர்.

இதுபோன்ற சந்தா சேர்ப்பு நிகழ்ச்சியின் மூலம் குடும்பத் தில் தீக்கதிர் சங்கமமாகி உள்ளது. கட்சித் தலைவரே நம் வீடு தேடி வந்துள்ளார் என்ற பெருமிதத்துடன் வேறு செலவிற்கு பணத்தை வைத்திருந்தாலும் அதனை தீக்கதிருக்கான சந்தா தொகையாக பெண் கள் கொடுத்தனர். கடலூர் தோழர்களுக்கு இது புதிய அனுபவமாக இருந்தது. கடலூர் செம்மண்டலம், கோண்டூர், முதுநகர், திருப்பாபுலியூர் ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று இரண்டு மணி நேரத்தில் 40 ஆண்டு சந்தா சேகரிக்கப்பட்டதாக நகரச் செயலாளர் ஆர்.அமர் நாத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். மருதவாணன், வி.சுப்புராயன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.பாஸ்கரன், நகர் குழு உறுப்பினர்கள் என்.பால்கி, திருமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.