நாகர்கோவில்,
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் தோழர்டி. ஆர்.மேரி சனிக்கிழமை காலை உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது இறுதி நிகழ்ச்சிகள் ஞாயிறன்று பள்ளிக்கல்லில் நடைபெற்றது. முன்னதாக நித்திரவிளையில் உள்ள அவரது இல்லத்தின் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார செயலாளர் சிதம்பர கிருஷ்ணன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி, மாவட்டத்தலைவர் ரெகுபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி, செயற்குழு உறுப்பினர்கள் விஜயமோகனன், ஏ.வி.பெல்லார்மின் ஆகியோர் பேசினர்.  மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா, பொருளாளர் ஆர்.மல்லிகா, மத்தியக் குழு உறுப்பினர் என்.அமிர்தம், துணைத் தலைவர் லட்சுமி, மாநிலக் குழுஉறுப்பினர்கள் பூமயில், கற்பகம், குணேஷ் வரி, தலைவர் புவனேஸ்வரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ரவி மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஏ.கே.பத்மநாபன், உ.வாசுகி இரங்கல்தோழர் டி.ஆர்.மேரி மறைவுக்கு சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், தோழர் டி.ஆர்.மேரி ஓய்வறியா களப்போராளி எனவும், சிஐடியுவிலும் உழைக்கும் பெண்கள் அமைப்பிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார். சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.