ராஞ்சி,
ஜார்கண்ட் ஓய்வூதியம் பெற வங்கியில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்த 62 வயது முதியவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டின் அனைத்து சேவைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படுவதாக கூறி வரும் மோடி அரசு… முதியோர்களை இதுபோல காக்க வைத்து உயிரை எடுக்கிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஜார்கண்ட் மாநிலம் பலமு என்ற இடத்தில்மோக்ஹார் கலா கிராமத்தை சேர்ந்தவர் ராம்ஜீத் ராஜ்வார் என்ற  62 வயது முதியவர் ஓய்வூதியம் பெறுவதற்காக வங்கிக்கு சென்றுள்ளார். அங்கு வயது முதிர்வு காரணமாக  அவருடைய கைரேகை சரியாக மேட்ச் ஆகவில்லை என்று கூறி,  ஹசானபாத்தில் உள்ள  வங்கி கிளைக்கு சென்று பார்க்குமாறு அறிவுறுத்திப்பட்டுள்ளார்.
இதையடுத்து தனது வயது மனைவியுடன் குமாரிதேவியுடன் ஹசனாபாத் எஸ்.பி.ஐ. கிளைக்கு சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில், முதியவரும் வரிசையில் சுமார் 4 மணி நேரம் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார்.
இதைக்கண்ட அவரது மனைவியும், அருகில் இருந்தவர்களும் அவரை மீட்டு தண்ணீர் கொடுத்துள்ளனர். அதைத்தொடர்ந்து மீண்டும் வரிசையில் நின்ற அந்த முதியவர் மீண்டும் மயங்கி விழுந்து பரிதாபமாக மரணமடைந்தார்.
வயதானவர்களை வெகுநேரமாக காக்க வைப்பது குறித்து வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் முறையிட்டும் அவர்கள் யாரும் கண்டுகொள்ளாத நிலையில் அநியமாக ஒரு உயிர் போய் விட்டது என்று அங்கிருந்தவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்த உயிரிழப்பு மோடி கற்பத்துவரும் டிஜிட்டல் இந்தியா என்பது வெறும் மாயை என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தி உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: