வேலூர்,
விஐடி பல்கலைக்கழகத்தின் 33 வது பட்டமளிப்பு விழாவில் மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பங்கேற்று 6,277 மாணவர்களுக்குபட்டம் வழங்குகிறார்.

சனிக்கிழமை (செப். 29) நடைபெறும் விஐடி பல்கலைக்கழகத்தின் 33 வது பட்டமளிப்பு விழாவில் 6,277 மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். இந்த விழாவில் மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.விஐடி அண்ணா அரங்கில்  நடைபெறும் பட்டமளிப்பு விழாவிற்கு விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், டாக்டர் சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் முன்னிலை வகிக்கின்றனர்.துணை வேந்தர் முனைவர் ஆனந் ஏ.சாமுவேல் வரவேற்று பேசுகிறார்.விழாவிற்கு வேந்தர் டாக்டர் ஜி.விசுநாதன் தலைமை வகித்து பிஎச்டி பட்டதாரிகள் 257 பேர் உட்பட 6,277 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

Leave A Reply

%d bloggers like this: