கிருஷ்ணகிரி,
ஓசூர் அருகே சுசசுருகாணப் பள்ளியிலுள்ள எக்சைடு தனியார் ஆலையில் கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்ய பணிக்கப்பட்ட மஞ்சுநாத், நாகேஷ் ஆகிய தலித் இளைஞர்கள் விஷவாயு தாக்கி பலியானார்கள்.

இந்த சம்பவத்துக்கும் எங்களுக்கும் பொறுப்பில்லை என்றும் பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் தொட்டிக்குள் இறங்கியதே இந்த விபத்துக்கு காரணம் என ஆலை நிர்வாகம் கூறியது. இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்த தொழிலாளர்கள், உறவினர்களின் போராட்டம் நடத்தினர். இச்சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ஜெயராமன், ஓசூர் ஒன்றியச் செயலாளர் பி.ஜி. மூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஆனந்த குமார், செயலாளர் இருதயராஜ், சிஐடியு மாவட்டச் செயலாளர் பீட்டர், மாநிலக் குழு உறுப்பினர் சிறீதர் ஆகியோர் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய நவீன முறைகளை பயன்படுத்தாமல் ஒப்பந்த தலித் தொழிலாளர்களை பயன்படுத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.தொழிற்சாலை ஆய்வாலரும் அரசும் தலையிட்டு எக்சைடு நிர்வாகத்தின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும், நீதி விசாரணை நடத்த வேண்டும், இறந்த தொழிலாளிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும், நட்ட ஈடாக தலா ரூ. 25 லட்சம் உடனடியாக வழங்க வேண்டும், ஆலையில் ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழித்து நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

Leave A Reply

%d bloggers like this: