நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக, கோடை காலத்தை போல் சுட்டெரித்த வெயிலால் மக்கள் அவதியடைந்தனர். வெயில் மட்டுமின்றி, பகல் மற்றும் இரவு நேர மின்வெட்டாலும் மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகலில் மாவட்டத்தின் பல பகுதிகளில் திடீரென மேகங்கள் திரண்டு பரவலாக மழை கொட்டியது.

சுமார் 1 மணி நேரம் பெய்த மழையால், கடந்த சில நாள்களாக நிலவிய உஷ்ணம் குறைந்தது. வியாழக்கிழமை அதிகபட்சமாக பெருஞ்சாணியில் 21 மி.மீட்டரும், கன்னிமாரில் 18.2 மி.மீட்டர் மழையும் பதிவானது. வெப்பசலனம் காரணமாக, கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: