புதுதில்லி,

டெல்லி அசோக் விஹார் பகுதியில் உள்ள மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2பேர் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தில்லி அசோக் விஹார் பகுதியில் இன்று காலை மூன்று அடுக்கு மாடி கட்டடம் திடீர் என இடிந்து விழுந்தது. இதையடுத்து, தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் மீட்புப்படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் இதுவரை 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் மேலும் பல இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: