புதுதில்லி :

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வருகின்ற அக்டோபர் 2ம் தேதியுடன் ஓய்வு பெறுவதால், அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி ரஞ்சன் கோகாயை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது. அதை ஏற்று ஜனாதிபதி கடந்த 3–ந் தேதி, நீதிபதி ரஞ்சன் கோகாயை புதிய தலைமை நீதிபதியாக நியமித்தார். இந்நிலையில், நீதிபதி ரஞ்சன் கோகாய் நியமனத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் சத்யவீர் சர்மா மனு தாக்கல் செய்திருந்தார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய்க்கு தகுதி இல்லை என கூறுவதாக மனு அமைந்திருந்தது. இந்த மனு ஏற்றுக்கொள்வதாக இல்லை எனக்கூறி உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Leave A Reply

%d bloggers like this: