லக்னோ;
உத்தரப்பிரதேச மாநிலத்தில், 19 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படுகொலை தொடர்பான வழக்கில், அம்மாநில சாமியார் முதல்வர் ஆதித்யநாத்துக்கு, நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சமாஜ்வாதி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் தலத் அஜிஸ். இவரின் தனிப் பாதுகாவலர் சத்ய பிரகாஷ் யாதவ். இவர் கடந்த 1990-ஆம் ஆண்டு, உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார். கோரக்பூரின் அப்போதைய எம்.பி.யாக இருந்த ஆதித்ய நாத் தலைமையிலான கும்பல்தான், சத்ய பிரகாஷ் யாதவை சுட்டுக்கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால், ஆதித்யநாத் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. வழக்கு பதிவு செய்யக்கோரி நீதிமன்றத்தில் முறையிட்டும், அதனை மகாராஜ்கஞ்ச் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, தலத் அஜீஸ் அண்மையில் லக்னோ உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், ஆதித்யநாத் உட்பட இந்த வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு, அண்மையில் மகாராஜ்கஞ்ச் அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.இந்நிலையில், மகாராஜ்கஞ்ச் நீதிமன்றம், தற்போது ஆதித்யநாத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: