லக்னோ; 
கோவில் விழா ஒன்றில், பலூனைத் தொட்டதற்காக, 12 வயது தலித் சிறுவனை, ஆதிக்க சாதியைச் சேர்ந்த 5 சிறுவர்கள் கும்பலாக சேர்ந்து அடித்துக் கொன்ற அவலம் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ரா நகரையொட்டி அலிகார் பகுதியிலுள்ள நட்ரோயி கிராமத்தில் கோவில் விழா ஒன்று நடைப்பெற்றுள்ளது. அப்போது கோவிலுக்குள் கட்டப்பட்டிருந்த அலங்கார பலூனை, அந்தப் பகுதியைச் சேர்ந்த தலித் சிறுவன் தொட்டுப் பார்த்துள்ளார்.

இதைக்கண்ட சாதி ஆதிக்க வகுப்பைச் சேர்ந்த 5 சிறுவர்கள், ‘தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த நீ, கோயில் பலூனை எப்படித் தொடலாம்’ என்று கூறி, கொடூரமாக தாக்கியுள்ளனர். தலித் சிறுவனின் கைகளை 2 பேரும், கால்களை 2 பேரும் பிடித்துக் கொள்ள, மற்றொரு சிறுவன் வயிற்றில் பலமுறை பலமாக மிதித்துள்ளான்.

இதில், பாதிக்கப்பட்ட தலித் சிறுவனை, ஆபத்தான நிலையில், அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி தலித் சிறுவன் இறந்து விட்டான். இதுதொடர்பாக, தற்போது ஐபிசி பிரிவு 304-இன் கீழ், சாதி ஆதிக்க சிறுவர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: