புதுதில்லி,
அரசு பணிகளில் பதவி உயர்வின் போது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

அரசு பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டிய கட்டாயமில்லை என்று கடந்த 2006-ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினர் பின் தங்கிய நிலையில் இருப்பதற்கான தரவுகளை வழங்க வேண்டும் என்றும், அரசு பணியில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி, மறுபரிசீலனை செய்ய வேண்யடும் என்று மத்திய அரசு மற்றும் பல்வேறு தரப்பினர் மனுத் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, அரசு பணிகளில் பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: