தஞ்சை,
அதிமுக அரசை பற்றி தரக்குறைவாக பேசினால் நாக்கை அறுத்துடுவேன் என, மிரட்டல் தொனியில் அதிமுக அமைச்சர் துரைக்கண்ணு பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு திமுக-காங்கிரஸ் கட்சிகளே காரணம் என்று குற்றம்சாட்டி அதிமுக சார்பில் நேற்று (செவ்வாய்கிழமை) தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையல் தஞ்சாவூரில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கலந்துகொண்டார். அப்போது பேசிய அமைச்சர் துரைக்கண்ணு, “தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. யாரை பார்த்து லஞ்ச ஆட்சி, குற்ற ஆட்சி என தவறாக பேசுகிறீர்கள்? தவறாக பேசிய உங்கள் நாக்கை அறுத்து விடுவோம். ஜாக்கிரதையாக இருங்கள் என தெரிவித்தார். இது உத்தம ஆட்சி. ஜெயலலிதா வழியில் பொற்கால ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ஜெயலலிதா என்னென்ன செய்ய வேண்டும் என எண்ணினார்களோ அதனை இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் செய்து வருகின்றனர்” என துரைக்கண்ணு பேசினார்.
இந்நிலையில் அமைச்சரின் பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.