திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலைசரி பார்த்தல் பணி மற்றும் மாதிரி வாக்குப்பதிவு செவ்வாயன்று ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலின் போது பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரி பார்த்தல் பணி மற்றும் மாதிரி வாக்குப்பதிவு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலையில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, காங்கயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலின் போது பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலிருந்து வாக்குப்பதிவு இயந்திரம் – 5,880, கட்டுப்பாட்டு இயந்திரம் – 3,200, விவிபிஎட் – 3,200 ஆகியவை பெறப்பட்டு பல்லடம் மற்றும் திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.மேலும், தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் நேரடி பார்வையில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, திருப்பூர் சார் ஆட்சியர் ஷ்ரவன்குமார், கலால் உதவி ஆணையர் சக்திவேலு, தேர்தல் வட்டாட்சியர் முருகதாஸ், திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: