மன்னார்குடி,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடுவட்டம் காவாரப்பட்டு கிராமத்தில் தந்தை பெரியார் சிலைக்கு சமூக விரோதிகள் அவமரியாதை செலுத்தியதை  கண்டித்து மன்னார்குடி பெரியார் சிலை எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழகத்ததின் மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திமுக முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ். வி்ஜயன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி. பாலு, மதிமுக மாவட்டசெயலாளர் பி. பாலசந்திரன், திராவிடர்  கழகத்தின் தலைமைக்கழக பேச்சாளர் அதிரடி அன்பழகன், விசிக மாநில நிர்வாகி ஆர். ரமணி, ஒன்றிய செயலாளர் கே. தன்ராஜ், திமுக  நகர செயலாளர் வீரா கணேசன், சிபிஎம் நகர செயலாளர் எஸ். ஆறுமுகம்,  சிபிஐ மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.ஜி.ரெத்தினக்குமார், நகர செயலாளர் வி. கலைச்செல்வன், தி.க. நகர செயலாளர் மு. ராமதாசு, ஒன்றியத் தலைவர் மு. தமிழ்ச்செல்வன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பெருந்திரளாய் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: