சிம்லா,
இமாச்சல் பிரதேசேத்திற்கு மலையேற்றம் சென்ற 35 ஐஐடி மாணவர்களும் பத்திரமாக உள்ளதாக இமாச்சல பிரதேச முதல்வர் தெரிவித்துள்ளார்.

இமாச்சல பிரதேசத்தில் லாஹுல் மற்றும் ஸ்பிடி  மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிக்கு 35 ஐஐடி மாணவர்கள் உட்பட  45 பேர் கொண்ட குழு மலையேற்றம் சென்றனர். இவர்கள் அனைவரும் ரூர்க்கியில் உள்ள ஐஐடியில் படித்து வந்த மாணவர்கள் ஆவர். இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. மலையேற்றம் சென்றவர்களுடன் தொடர்பும் திடீரென துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை தேடும் பணி நடைபெற்றது. இந்த நிலையில், 35 -ஐஐடி மாணவர்கள் உட்பட 45 பேர் பத்திரமாக உள்ளனர் என  இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாகூர் தெரிவித்துள்ளார். 

Leave A Reply

%d bloggers like this: