சென்னை;
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திங்களன்று நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

அற்புதம்மாள், தமது மகனின் வழக்கு தொடர்பான 3 கோப்புக்களை வழங்கி னார். வழக்கில் பல குளறுபடிகள் இருப்பதாக தீர்ப் பளித்த நீதிபதி தாமஸ் கூறியகருத்து, படுகொலை குறித்து
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் எழுதிய புத்தகம், பேரறிவாளனின் வாக்குமூலத்தை முழுமையாகப் பதிவிடவில்லை என சிபிஐ முன்னாள் அதிகாரி
தியாகராஜன் கூறிய வீடியோவின் குறுந்தகடு உள்ளிட்டவை அந்த கோப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: