இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம்மத்தியக்குழு உறுப்பினர் அ. சவுந்தரராசன் தலைமையில், 2018 செப்டம்பர் 22-24 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத்ஜி. ராமகிருஷ்ணன்மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன்டி.கே. ரங்கராஜன்,
உ.வாசுகிபி.சம்பத் மற்றும் மாநில செயற்குழுமாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இன்றைய (24.09.2018) கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் வெளியிட்டுள் அறிக்கையில் கூறபட்டுள்ளதாவது:

தீண்டாமைக்கு எதிரான நேரடிக் களப்போராட்டங்களை வெற்றிபெறச் செய்வீர்

சாணிப்பால், சவுக்கடி கொடுமைக்கு சாவுமணி அடித்த செங்கொடி இயக்கத்தின் வீரப்புதல்வன் தோழர் பி. சீனிவாசராவ் நினைவு தினத்தையொட்டி செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தினங்களில் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான நேரடிக் களப்போராட்டங்களை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்துகிறது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், தாயம்பாளையம் தலித் அருந்ததியர் மக்களுக்கு முடிதிருத்த மறுக்கப்படுவதை ஒழித்து தலித் அருந்ததியர் மக்களுடைய சமூக உரிமையை நிலைநாட்டவும், காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், ஒரத்தூர் கிராமத்தில் பஞ்சமி நிலம் மீட்பு போராட்டமும், புதுக்கோட்டை மாவட்டம், அரிமலம் ஒன்றியம், நெடுங்குடி கிராமத்தில் குப்பை சேகரிப்பு மையமாக மாற்றப்பட்டுள்ள தலித் மக்களின் மயான நிலத்தை மீட்க, அங்கே குப்பைக்கென்று அமைக்கப்பட்டுள்ள செட்டை அகற்றும் போராட்டமும், ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், மந்தை மாரியம்மன் கோவில் தெருவிலுள்ள 32 தலித் குடும்பங்களுக்கு 50 வருடமாக பட்டா வழங்கப்படவில்லை. நிலவுரிமைக்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டமும், தூத்துக்குடி மாவட்டம், படர்ந்த புலி கிராமத்தில் அருந்ததியர் குடியிருப்பு சாதிய துவசேத்துடன் மிகவும் தொலைவில் உள்ள ராமணூத்து ஊராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் உட்பட அனைத்து வாழ்வாதாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்பட உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம், சுல்தான்பேட்டை ஒன்றியம், வாரப்பட்டி கிராமத்தில் தலித் மக்களுக்கு பட்டாவுடன் வழங்கப்பட்ட நிலத்தைஅளந்து கொடுக்காமல் அலட்சியப்படுத்தும் அரசு நிர்வாகத்தை கண்டித்து முற்றுகைப் போராட்டமும், தருமபுரி மாவட்டம், அரூர் தொகுதி சிபிஎம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பி. டில்லிபாபு தொகுதி மேம்பாட்டு நிதியில் அரூர், அம்பேத்கர் நகரில் கட்டி முடிக்கப்பட்ட சமூக நலக்கூடம் உள்நோக்கத்துடன் திறக்கப்படாமல் உள்ளது. மக்களைத் திரட்டி சமூக நலக் கூடத்தை திறக்கும் போராட்டமும் நடைபெறவுள்ளது.

தலித் மக்களின் சமூக உரிமையை நிலைநாட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திடும் இப்போராட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது முழுஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது. இதனை வெற்றி பெறச்செய்திட அனைத்துப் பகுதி மக்களும் ஆதரவளிக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.