ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குழந்தைகள் உட்பட 5 பேர் பலியாகினர்.
ஜம்மு மாநிலத்தில் தோடா உட்பட பல  பகுதிகளில் கடந்த இரு தினங்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. கனமழையால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மாநிலத்தின் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. மேலும் மழை காரணமாக பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நைலயில் மாநிலத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கலி பாடோலி கிராமத்தில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு ஒன்று முற்றிலும் சேதமடைந்தது. இந்த துயர சம்பவத்தில் வீட்டிலிருந்த பஷீர் அகமத் (25), அவரது மனைவி நகீனா (23) , குழந்தைகள் சுல்ஃபி பானு (9), முகமது ஷரிஃப் (8) மற்றும் ஒன்றரை வயது குழந்தை ஆகியோர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.