இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம்மத்தியக்குழு உறுப்பினர் அ. சவுந்தரராசன் தலைமையில், 2018 செப்டம்பர் 22-24 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத்ஜி. ராமகிருஷ்ணன்மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன்டி.கே. ரங்கராஜன்,
உ.வாசுகிபி.சம்பத் மற்றும் மாநில செயற்குழுமாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இன்றைய (24.09.2018) கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் வெளியிட்டுள் அறிக்கையில் கூறபட்டுள்ளதாவது:

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை வட்டார வாலிபர் சங்கத்தின் இடைக்கமிட்டி மாநாடு 23.9.2018 அன்று நடத்துவதற்கான காவல்துறை அனுமதி கோரப்பட்டது. காவல்துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பெயரில் குறிப்பிட்ட இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. பிரதிநிதிகள் மாநாடு முடித்து பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வாலிபர் சங்கத்தினர் அமைதியாக எந்த பிரச்சனையுமின்றி கும்பலாக நடந்து சென்றனர். ஆனால், காவல்துறையினர் வேண்டுமென்றே திட்டமிட்டு ஏராளமான போலீசாரை வாலிபர் சங்கத்தினர்  வீடுகளில் நிறுத்தி வைத்துள்ளனர். வாலிபர் சங்க இடைக்கமிட்டி செயலாளர் எட்வின்பிரைட் அவர்களின் அண்ணன் எட்வின் சுரேஷை பணயக் கைதியாக, காவல்நிலையத்தில் வைத்துள்ளனர். மேலும் பல தோழர்களின் வீட்டு ஜன்னல்களை  அடித்து நொறுக்கி அராஜகம் செய்து வாலிபர் சங்கத்தினர்  மீது திட்டமிட்டு பொய்வழக்குகளை புனைந்துள்ளனர். பொதுக்கூட்டம் நடந்த ஆலம்பாறை பகுதியில் ஒரு பதற்றமான நிலையை  உருவாக்கியுள்ளனர்.

காவல்துறையினரின் இந்த ஜனநாயக விரோதப்போக்கை வன்மையாக கண்டிப்பதுடன்,  பதியப்பட்டுள்ள பொய் வழக்குகள் அனைத்தையும் உடனடியாக வாபஸ் பெற வேண்டுமெனவும், இதற்கு காரணமான மார்த்தாண்டம் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Leave A Reply

%d bloggers like this: