ஈரோடு,
ஈரோடு மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என பொதுமக்கள் மனு அளித்தனர்.

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டம் துவங்கிய பின் துவங்கப்பட்ட பெருந்துறை ரோடு மேம்பால பணிகள் மிக விரைவாக நடந்து வரும் நிலையில், ஆண்டுக்கணக்கில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளால் நகர்புறபகுதியில் பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக மிக மோசமாக காணப்படுகிறது. எனவே, மாநகராட்சி பகுதிகளில் தோண்டப்பட்ட குழிகளை மூடி தார் சாலை அமைத்து கொடுத்து, பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என வலியுறுத்தி திங்களன்று பொதுமக்கள் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: