புதுதில்லி,
ரயில்களில் ஈவ் டீசிங் செய்பவர்களுக்கு எதிராக 3 வருட சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டப்பரிவை சேர்க்க வேண்டும் என்று ஆர்.பி.எப். கோரிக்கை வைத்துள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி ஒன்றிற்கு அளிக்கப்பட்ட பதிலில், கடந்த 2014-2016 ஆம் ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக ரயில்களில் நடைபெற்ற குற்றங்களின் எண்ணிக்கை 35 சதவீதமாக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெண்களுக்கு எதிராக ரயில்களில் ஈவ்டீசிங் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுவது ஆகியவற்றிற்கு 3 வருட சிறைதண்டனை விதிக்கும் வகையில் ரயில்வே சட்டத்தில் புதிய பிரிவுகளை சேர்க்கும்படி ரயில்வே போலீஸ் படை(ஆர்.பி.எப்.) கோரிக்கை விடுத்துள்ளது. இதுபற்றி அந்த படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒவ்வொரு முறை ரயிலில் பெண் ஒருவர் துன்புறுத்தப்படும்பொழுது அல்லது பெண்கள் பெட்டிகளில் ஆண்கள் பயணிப்பது கண்டறியப்படும் பொழுது ரயில்வே போலீசாரின் உதவியின்றி நாங்கள் அவர்களைபிடிக்க முடியாது. இந்த பிரிவுகளைசேர்த்து விட்டால் உடனடியாக செயல் பட முடியும். ரயில்வே போலீசாரின் உதவியும் தேவைப்படாது என கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: