புதுதில்லி,
ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் குற்றம் சாட்டுவதால் எல்லாம்ரபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை இணைக்க வேண்டும் என மத்திய அரசு வற்புறுத்தியதாக பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹாலண்டே சமீபத்தில் செய்தி இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். அதே சமயம் விமானத்தை தயாரிக்கும் பிரான்சின் டசால்ட் நிறுவனம், “எங்களுக்கு தேவையான உதவி நிறுவனத்தை நாங்களே தேர்வு செய்து கொள்ளலாம்” என்னும் வகையில் ஒப்பந்தம் இருந்ததாக விளக்கம் அளித்திருந்தது. காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.  இந்நிலையில் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் குற்றம்சாட்டுவதால் எல்லாம் ரபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என்று மத்தியநிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் ராகுல்காந்தி மத்திய அரசுமீது கூறி வரும் குற்றச்சாட்டுகளுக் கும், பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே சமீபத்தில் ரபேல் விமானம் குறித்து அளித்த பேட்டிக்கும் ஏதோதொடர்பு இருக்கிறது என்று தோன்றுகிறது. முதலில் இதுதொடர்பாக ராகுல் டுவிட்டரில் ஒரு கருத்து தெரிவிக்கிறார். அடுத்த சில வாரங்களில் ஹாலண்டேவின் கருத்து வெளியாகிறது. இந்த இரண்டு கருத்துக்களும் நன்கு திட்டமிட்டு வெளியிடப்பட்டது போலவும், இரண்டுக்கும் தொடர்பு இருப்பதாகவும் தோன்றுகிறது. ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் குற்றம்சாட்டுவதால் எல்லாம் ரபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது. திட்டமிட்டபடி ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடையும் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: