ஈரோடு,
ஜம்பை பேரூராட்சி பகுதியில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தித்தரக்கோரி அப்பகுதி மக்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா ஜம்பை பகுதியில் பெருமாபாளையம் கரட்டில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக தெருவிளக்குகள் எரியாததால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்தில் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏற்கனேவே பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் முறையாக வழங்காத காரணத்தால் குடிநீருக்காக நீண்டதூரம் செல்லவேண்டிய அவலம் இருந்துவந்தது. இச்சூழலில் தெருவிளக்குகள் இல்லாமல் இரவு நேரங்களில் ஊரே இருள் சூழ்ந்து கிடப்பதால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் சனியன்று கையில் தீப்பந்தம் ஏந்தி பேரூராட்சி நிர்வாகத்திற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், இப்பிரச்சனை தொடர்பாக மாவட்டம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தகட்டமாக தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என ஆவேசமாக தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: