மனிதன் தான் உயிர் வாழ்வதற்குத் தேவையான பொருளாதார நிலைமைகளை உருவாக்கும் பொருட்டு இயற்கையை மாற்றுகிறான். இந்த நிகழ்ச்சிப் போக்குதான் உற்பத்தி என்றழைக்கப்படுகிறது. மிருகங்கள் என்ன செய்கிறதென்றால் தங்கள் தேவைகளுக்காக இயற்கை அளிப்பதை பயன்படுத்திக் கொண்டு திருப்தி அடைகின்றன.

ஆனால் மனிதனோ தான் உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவு, உடை மற்றும் இருப்பிடம் அனைத்தையும் தயார் செய்கிறான்.எனவே பொருள் உற்பத்தி என்பது மனித வாழ்விற்கு நிரந்தரமான இயற்கை நிலைமையாகும். இதுதான் மனித குல வாழ்விற்கு அடிப்படையாக உள்ளது.பொருள் உற்பத்தி முறைக்கு மூன்று அம்சங்கள் அவசியமாகும்.

1. உழைப்பின் இலக்கு
2. உழைப்புக் கருவி
3. மனிதனின் உழைப்பு.

இதுதான் மனிதனின் நோக்கமுள்ள நடவடிக்கைஉற்பத்தி என்பது சமூகத் தன்மை வாய்ந்தது. அதற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒரு பக்கம் என்பது இயற்கையோடு உள்ள மனிதனின் உறவு. இது உற்பத்திச் சக்திகள் என்ற வரிசையில் வருகிறது. மறுபக்கம் என்பது உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மனிதர்களிடையேயான உறவுகள். இது உற்பத்தி உறவுகள் என்ற வரிசையில் வருகிறது.இவ்விரு பக்கங்களுக்கிடையேயான உறவானது ஒரு விதி (law) யினால் தீர்மானிக்கப்படுகிறது.

அது என்னவென்றால் உற்பத்தி உறவுகள் என்பது உற்பத்திச் சக்திகளின் தன்மை மற்றும் வளர்ச்சி மட்டத்திற்கு ஏற்றார்போல் இருக்க வேண்டும் என்பதாகும். உற்பத்தி என்பது வரலாற்று ரீதியாக உருவாக்கப்பட்டுள்ள உற்பத்தி முறையோடு இருந்து வருகிறது. உதாரணத்திற்கு ஆதி பொதுவுடைமைச் சமூகம், அடிமைச் சமூகம், பிரபுத்துவச் சமூகம், முத
லாளித்துவ சமூகம் மற்றும் கம்யூனிச சமூகத்துடன் சேர்ந்தே வருகிறது.உற்பத்தி என்பது விநியோகம், பரிவர்த்தனை மற்றும் நுகர்வு ஆகியவற்றுடன் பிரிக்க முடியாதபடி இணைக்கப்பட்டிருக்கிறது.

உற்பத்தி மற்றும் நுகர்வு என்பவை அடிப்படையிலேயே எதிரும் புதிருமானவை; ஆனால் அதே நேரத்தில் அவை சமூகவாழ்வில் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டிருப்பவை. உற்பத்தி முறைப்போக்கில் ஈடுபடும் மக்கள் இயற்கை மீது செயல்பட்டு அதை மாற்றுவதோடு மட்டுமல்லாமல் அதே நேரத்தில் தங்களுடைய எதார்த்தத் தன்மையையும், திறமைகளையும் அறிவு, தேவை மற்றும் நலன்களையும் மாற்றிக் கொள்கிறார்கள்.

ஆதாரம்: தத்துவ அகராதி (ஆங்கிலம்)

Leave a Reply

You must be logged in to post a comment.