சென்னை;
சென்னையில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற துணை மருத்துவப் படிப்புகளுக்காக கலந்தாய்வில், 238 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிஎஸ்சி ரேடியாலஜி, பி.எஸ்.சி கார்டியோ டெக்னாலஜி உள்ளிட்ட 15 விதமான துணை மருத்துவப் படிப்புகளுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்கள் உள்ளன. துணை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில், 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

சென்னையில் உள்ள நான்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில், பிஎஸ்சி ரேடியாலஜி, பி.எஸ்.சி கார்டியோ டெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகளில் சேர தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் கலந்தாய்வு நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வில், 238 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மருத்துவப் படிப்பு (எம்பிபிஎஸ்) மற்றும் பல் மருத்துவப்படிப்புக்கு இடங்கள் கிடைக்காதவர்கள், இதுபோன்ற துணை மருத்துவப் படிப்புகளில் சேரலாம் என்று பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதா லட்சுமி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: