திருச்சி:
திருச்சி நாவலூர் குட்டப்பட்டுவில் உள்ள தேசிய சட்டப்பள்ளியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி சனிக்கிழமையன்று சர்வதேச மாநாடு நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி உரையாற்றினார்.

அவர் பேசுகையில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கான பல அம்சங்கள் உள்ளன. ஆண், பெண் சமத்துவத்தில் முன்னோடி மாநிலமான தமிழகத்திலும் கூட பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.

நாட்டில் இயற்கை வளங்கள் அதிகளவில் சுரண்டப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் மணல் கொள்ளை அதிகளவில் நடைபெறுவதாக வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுகிறது. இவை நீடித்த வளர்ச்சிக்கு தடை யாக உள்ளது. இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: