சென்னை,
சென்னை ஐஐடியில் கேரள மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ஷாஜஹான் குர்முத்தின் மகனான ஷாஹித் குர்முத்(23) ஐஐடி வளாகத்தில் உள்ள ஜமுனா விடுதியில் தங்கியிருந்தார். இவர் சென்னை ஐஐடியில் பெருங்கடல் பொறியியல் பிரிவில் 5 ஆண்டு பட்டப்படிப்பை பயின்று வந்தார். இந்நிலையில் அவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து காவல் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் ஷாஹித் தனது குடும்பப் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர் அடிக்கடி தனது பெற்றோர் மற்றும் சகோதரர் உடன் தொலைபேசியில் சண்டையிட்டு வந்துள்ளார்.

நேற்று இரவு மிகவும் வேதனையுடன் காணப்பட்டார். அவரது தொலைபேசி அழைப்புகள் எதற்கும் பதிலளிக்கவில்லை. மேலும் தனது தற்கொலைக்கு காரணமாக எந்தவொரு கடிதமும் விட்டுச் செல்லவில்லை. அதேசமயம் வருகைப் பதிவேட்டில் போதிய வருகை சதவீதம் இல்லாததால் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
ஷாஹித்தின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஷாஹித்தின் குடும்ப உறுப்பினர்கள் வருகைக்காக, போலீசார் கா

Leave a Reply

You must be logged in to post a comment.