ஜெட்டா;
சவூதி அரேபியாவில் இளவரசர் முகமது பின் சல்மான் பொறுப்புக்கு வந்த பின்னர், பல்வேறு பழமைவாத செயல்பாடுகள் தூக்கி எறியப்பட்டன. பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி, சினிமா தியேட்டர் என பாராட்டத்தக்க வண்ணம் பல அறிவிப்புகள் வர
வேற்பை பெற்றன.

இந்நிலையில், அல் சவுதியா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வீம் அல் தஹீல் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். மாலை நேரத்தில் மட்டும் இவர் ஆண் வாசிப்பா
ளருடன் இணைந்து செய்தி வாசிக்க அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது.அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் உள்ள பெண் கள் வரவேற்பு அளித்துள்ளனர். மேலும்
விஷன் 2030 என்ற பெயரில் இளவரசர் மேலும் பல புரட்சிகரமான திட்டங்களுக்கு அனுமதியளிப்பார் என்றும் சவூதி பெண்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.