===என்.ராமகிருஷ்ணன்===                                                                                                                                                  நம் கருத்தில் ஓர்அகிலருஷ்ய அரசியல் செய்தித்த்தாளை நிறுவுவதே, நம்செயலின் ஆரம்பப் புள்ளியாக, நாம் விரும்பும் அமைப்பைப் படைக்கும் முதல் நடைமுறை வேலையாக இருக்க வேண்டும். இந்தச் செய்தித்தாளே, அமைப்பை ஒரே சீராக
வளர்க்கவும் செழுமைப்படுத்தவும் விரிவுபடுத்தவும் அடிப்படையம் சமாகப் பயன்படும். எல்லா
வற்றிற்கும் மேலாக நமக்கு அவசியமானது ஒரு செய்தித்தாளே. அதில்லாமல் நாம் கோட்பாடுரீதியில் முரணில்லாததும் முழுமையானதுமான பிரச்சாரத்தையும் கிளர்ச்சியையும் முறையாக நடத்த முடியாது.

பல்வேறு வட்டார இயக்கங்களை ஒரே அகில ருஷ்ய இயக்கமாக மாற்றியமைப்பதில், எடுத்துக் கொள்ள வேண்டிய முதல் நடவடிக்கை, அகில ருஷ்யச் செய்தித்தாளைத் தொடங்குவதேயாகும். கடைசியாக, நமக்கு தேவையான பத்திரிகை ஓர் அரசியல் செய்தித்தா
ளாகவே இருக்க வேண்டும்.

அரசியல் செய்தித்தாள் ஒன்று இல்லாமல், அரசியல் இயக்கம் என்று அழைக்கத் தகுதியுடைய இயக்கத்தைப் பற்றி இன்றைய ஐரோப்பாவில் சிந்திக்கவே முடியாது. அச்செய்தித்தாள் இல்லா
மல், நமது கடமையை – அரசியல் அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தும் அம்சங்
கள் அனைத்தையும் ஒன்று சேரத் திரட்டி, அவற்றைக்கொண்டு பாட்டாளி வர்க்கத்தின் இயக்கத்தைச் செழுமைப்படுத்தும் கடமையை – நாம் நிறைவேற்ற முடியவே முடியாது.
பாட்டாளி வர்க்கத்தின் வாயிலாக அந்தப் பத்திரிகை நகர்ப்புற சிறு முதலாளித்துவத்தினர், நாட்டுப்புறக் கைத் தொழிலாளர்கள், கிராம விவசாயிகள் ஆகியோரின் அணிகளில் ஊடுருவி, உண்மையிலேயே பொதுமக்களுக்குரிய அரசியல் செய்தித் தாளாகிவிடும்.

எனினும், செய்தித்தாள் ஆற்ற வேண்டிய பங்கு, கருத்துக்களைப் பரப்புவதிலும் அரசியல் அறிவைப் புகுத்துவது, அரசியல் கூட்டாளிகளை ஈர்த்துக் கொள்வது ஆகிய நடவடிக்கைகளில் மட்டும்  அடங்கிவிடுவதில்லை. பத்திரிகை என்பது கூட்டுத்துவப் பிரச்சாரகனாகவும் கூட்டுத்துவக் கிளர்ச்சிக்காரனாகவும் இருப்பதோடு கூட்டுத்துவ ஒழுங்கமைப்பாளனாகவும் உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.