சேலம், செப்.22-
லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர் சங்கத்தின் 34வது பொது மகாசபை கூட்டம்
சேலம் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள பொன்னுசாமி திருமண
மண்டபத்தில் நடந்தது. தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பின்தலைவர் பாலாஜி
குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.

மேலாண்மை இயக்குனர் மற்றும் முதன்மைநிர்வாகஅதிகாரி பார்த்தசார்தி
முகர்ஜி சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில்வங்கியில் சு மார்ரூ 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி கடன் பெற்றுகடனை திரும்ப செலுத்தாதவர்கள் மீது கடுமையான சட்டம் கொண்டு வர
வேண்டும். விலைவாசி உயர்வு, ஊழல், ஒப்பந்த சேவை அமர்த்தம் ஆகியவற்றை  கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. தொழிலாளர் நலச் சட்ட திருத்தம் போன்ற சமூக நல  பிரச்சினைகள் குறித்தும் கூ ட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மாநாட்டில் யூ என்ஐ தலைவர் மிலிண்ட் நட்கர்ணி, பொது செயலாளர் துளசிராம்,
ராமமூர்த்தி, சங்க தலைவர் நரசிம்மன், பொதுசெயலாளர் முருகேசன்,
பாஸ்கரன், ஸ்ரீதர், சரவணன், பிரகாஷ், மற்றும் 200க்கும் மேற்பட்ட லட்சுமி
விலாஸ் வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: