சேலம்,செப் 22-
டீசல் சிக்கனம் என்ற பெயரில் ஓட்டுனரை தறைகுறைவாக நடத்தும் நிர்வாகத்தை கண்டித்து அக்டோபர் -16ல் டீசல் புக்தகம் எரிப்பு போராட்டம் நடத்தப்படும் என சேலம் விபிசி நினைவகத்தில் சனியன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் சேலம் கோட்டம் 32-வது ஆண்டு பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் சேலம் கோட்ட ஆண்டு பேரவைதலைவர் சிங்காரம் தலைமையில் நடைபெற்றது.  இதில் டீசல் அதிகம் பிடிப்பதாக கூறி ஓட்டுனரை டீசல் புத்தகத்தில் கையெழுத்து போடமாட்டேன் பலமணிநேரம் காக்கவைத்து தரகுறைவாக திட்டும் போக்கை மாற்றிகொள்ளாவிட்டால் அக்டபர்-16ல் டீசல் வசூல் புத்தகத்தை எரிக்கும் போராட்டம் நடத்தப்படும். 240 நாட்கள் பணி முடித்த ஆர்சி-ஆர்டிதொழிலாளர்களை அந்த தேதியில் இருந்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்தப்படி ஒப்பந்த நிலுவை தொகைகளை உடனே வழங்க
வேண்டும். இரண்டு ஆண்டுகளாக வழங்காமல் உள்ள கல்வி முன்பணம் வழங்க வேண்டும். இஎல், சரன்டர் பணத்தை உடனே வழங்க வேண்டும். ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வுபெறும் நாளன்றே பணப்பலன்களை வழங்க வேண்டும். பென்சனை மாதத்தின் முதல் நாளில் வழங்க வேண்டும். மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக நடத்துனர் இல்லாமல் பேருந்து இயக்கலாம் என்ற தமிழக அரசின் அரசைணையைஉடனடியாக வாபஸ்
வாங்க வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்தப்படி 48ரூபாய்க்குமேல் உயரும் டீசல் விலையினை போக்குவரத்து கழகங்களுக்கு வழங்க வேண்டும். மோட்டார் வாகன சட்டதிருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். போக்குவரத்து கழகத்தில் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். அரசு பேருந்து கட்டண உயர்வால் கழக பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் முப்பது லட்சம் பேர் போக்குவரத்து கழகங்களில் பயணம் செய்வதில்லை. எனவே பாயின்ட் டூ பாயின்ட், எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டைம் சேவிங் சர்வீஸ் என்ற
பெயர்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் முறையை மாற்றி சாதாரண பேருந்து கட்டணம் வசூலிக்க வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பேரவையை சிஐடியு மாநில குழு உறுப்பினர், எஸ்இடிசி துணைப்பொதுச்செயலாளர் என்.முருகேசன் ஆகியோர்
வாழ்த்திப்பேசினர். சம்மேளன துணைத்தலைவர் எம்.சந்திரன் நிறைவுரையாற்றினார். இதில் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். புதிய நிர்வாகிகள். தலைவாராக செம்பன், பொதுச்செயலாளராக ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளராக எம்.சேகர், துணைப்பொதுச்செயலாளராக டி.செந்தில்குமார், எம்.குணசேகரன், துணைத்தலைவர்களாக- சி.கிருஷ்ணன், எஸ்.மணிமாறன், டி.உதயகுமார், எ.கோவிந்தன், வேலுசாமி, தீனதயாளன், பாண்டியன், செயலாளர்களாக – கே.வேல்முருகன், என்.இளவழகன், செந்தில்குமார்,
பி.முருகன், வி,பழனிவேல், பி.சேகர்,டி.குமார், இணைசெயலாளர்களாக- எம்.ஆனந்தராஜ், எம்.ரகுநாதன், ரங்கசாமி, போஜகன், எம்.பழனிசாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.