மாஸ்கோ: 
கடந்த 2014-ஆம் ஆண்டு ரஷ்யாவில் குளிர்கால ஒலிம்பிக் தொடர் மற்றும் 2015-ஆம் ஆண்டின் இடைப்பட்ட காலங்களில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச தொடர்களில் ரஷ்யா தடகள வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தி விளையாடியதாகவும், ஊக்க மருந்து விவகாரத்தில் வீரர்கள் எவரும் சிக்காமல் காப்பாற்றுவதற்காக அந்நாட்டு ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் விளையாட்டு அமைச்சகத்தின் உதவியுடன் பல்வேறு வழிமுறைகளை கையாண்டதாக புகார்கள் எழுந்தன. புகாரை அடுத்து வீரர்களின் சிறுநீர் மாதிரிகளை பரிசோதனை செய்வதற்காக சர்வதேச ஊக்க மருந்து அமைப்பான ‘வாடா’ உறுப்பினர்களுக்கு ரஷ்ய அரசு அனுமதி அளிக்கவில்லை.
ரஷ்யாவின் இந்த செயலால் கோபமடைந்த ‘வாடா’ அந்நாட்டு ஊக்க மருந்து ஆணையத்துக்கு தடை விதித்தது.இந்த தடையால் ரஷ்ய தடகள வீரர்கள் கடந்த 3 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாமல் முடங்கிருந்தனர்.

இந்நிலையில்,வெள்ளியன்று நடைபெற்ற ‘வாடா’ செயற்குழு கூட்டத்தில் ரஷ்ய ஊக்க மருந்து ஆணையம் மீதான தடையை நீக்குவதாக அறிக்கை வெளியிடப்பட்டது.‘வாடா’வின் இந்த முடிவை ரஷ்ய அரசு வரவேற்றுள்ளது.தடை நீக்கப்பட்டதால் ரஷ்ய தடகள வீரர்கள் வழக்கம் போல சர்வதேச போட்டிகளில் பங்கேற்கலாம் என ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: